கடையநல்லூர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் பொறுப்பு ஜெயா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது
தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது.
மேலும் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு
கீழ்காணும் பாடப்பிரிவுகள் உள்ளன.
1 இளங்கலை தமிழ், ( BA TAMIL)
2 இளங்கலை ஆங்கிலம், (BA ENGLISH)
3 வணிகவியல், (B.Com)
4 வணிக நிர்வாகவியல், (BBA)
5 இளங்கலை கணிதவியல், (B.Sc maths)
6 இளங்கலை கணினி அறிவியல், (B.Sc Computer Science).
ஆன்லைன்
விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
வருகின்ற 29ஆம் தேதி வரை மாணவ மாணவியர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணையதள வசதியுடன் உதவி மையம் கல்லூரி வளாகத்தில் செயல்படுகிறது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவை சார்ந்த மாணவ மாணவியர்கள் விண்ணப்பக் கட்டணமாக இரண்டு ரூபாயும் மற்ற பிரிவை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஐம்பது ரூபாய் கட்டணமாகவும் ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள்.
1. பன்னிரண்டாம் வகுப்பு மாற்று சான்றிதழ்.
2. பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
3. ஆதார் அட்டை .
4. சாதி சான்றிதழ் .
5. மின்னஞ்சல் முகவரி .
6. கைபேசி எண் .
7. இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
8. விண்ணப்பக் கட்டணம் கட்டுவதற்கு ATM card.